Friday, September 27, 2013

Protective Chants

Image Source - Google
Sky runs a circus tonight
Dangling dark nimbus clouds
Slouch around like old elephants
Dancing to the tunes
Of thunderstorm’s clapping
Whipped by wild flashes
Of the whimsical lightning
Mother yells from inside
Offering words of advice
‘Call the name of Arjun
To protect you from thunder’
My wandering mind wonders
Whose name would Arjun chant
To ward off his rain fears!


Ashok Krishna

Thursday, September 5, 2013

மௌனம்

Image Source - Google

காதலாகிக் கசிந்துருகி
மனத்திருப்பை மடலிருத்தி
அனுப்பி வைத்தக் கடிதமொன்று
பதிலற்றுக் கிடக்கிறது
அனாதையின் அழுகை போல்
 

ஆழியலை ஆர்ப்பரிப்பாய்
ஆழ்மனத்தின் தவிப்புகளை
தூண்டிவிட்டுத் தள்ளி நிற்கும்
உன்னுடைய உதாசீனம்
மூச்சுக்காற்றின் மொழி போல
மனதோடு பேசி நிற்கும்
உன் மௌனத்தின் பேரிரைச்சல்
 

மௌனத்தின் அர்த்தம்
சம்மதம் கூடத்தான்
என்றெனக்கு சமாதானம்
சொல்பவர்களிடம்
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் மௌனத்தை விட
மரணம் கூட மேலென்று!



அஷோக் கிருஷ்ணா