Monday, September 5, 2016

பிறை நிலா

முன்னொரு நாளதனில்
முதல் முறை
நான் பார்த்த பொழுது
ஒளிந்திருந்தும் ஒளியாமலும்
முகம் தெரிந்தும் தெரியாமலும்
இதழ் திறந்தும் திறவாமலும்
நீ உதிர்த்த புன்சிரி போல்
மேற்திசையின் அடிவானில்
மெலிதாய் ஓர் நிலாக்கீற்று!
பிறை நிலா (Image Source - GettyImages)