Monday, March 4, 2013

நினைவுகள்

Image Source - Google
இன்று நான் சொல்வேன்
என்றெண்ணி நீயும்
நாளை நீ சொல்வாய்
என்றெண்ணி நானும்
காத்திருந்த நாட்களதில்
கனிந்து வந்த காதல்
உன் வார்த்தை நான் பேசி
என் எண்ணம் நீ புரிந்து
உயிர் ஒன்று உடல் வேறாய்
உணர்வுகள் ஒன்றிப்போய்
உடனிருந்த நாட்களதில்
வளர்ந்திருந்த காதல்
நானின்றி நீயில்லை
என்றிருந்த நீயும்
நீயின்றி வாழ்வில்லை
என்றான நானும்
தனித்தனியாய் வழி நடக்கும்
தவிப்பான நாட்களிதிலும்
நினைவுக்குமிழ் சுவாசங்களில்
உயிர்த்துத்தான் இருக்கிறது
உயிருள்ள என் சடலமிதில்!

No comments:

Post a Comment